காஞ்சிபுரம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொள்ளும் முகாம்கள் இனிவரும் நாட்களில் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாம்களில் பங்கேற்கும் மருத்துவர்கள்:
- எலும்பு முறிவு மருத்துவர் (Orthopedic Specialist)
- காது, மூக்கு, தொண்டை மருத்துவர் (ENT Specialist)
- மனநல மருத்துவர் (Psychiatrist)
- நரம்பியல் மருத்துவர் (Neurologist)
- பொது மருத்துவர் (General Physician)
- கண் மருத்துவர் (Ophthalmologist)
- குழந்தை நல மருத்துவர் (Pediatrician)
- காது பரிசோதகர் (Audiologist)
- கண் பரிசோதகர் (Ophthalmic Technician)
இந்த முகாம்களின் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டை (UDID Card) பெற தேவையான மருத்துவ பரிசோதனைகளையும் சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் பெறலாம்.
முகாம்கள் நடைபெறும் இடம் - அட்டவணை
வ. எண் |
ஒன்றியம் |
இடம் |
நடைபெறும் நாள் |
1. |
காஞ்சிபுரம் |
DEIC, அரசு பொது மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் |
வாரம்தோறும் புதன்கிழமை |
2. |
திருப்பெரும்புதூர் |
அரசு பொது
மருத்துவமனை, திருப்பெரும்புதூர் |
மாதத்தின்
முதல் வெள்ளிக்கிழமை |
3. |
வாலாஜாபாத் |
அரசு பொது
மருத்துவமனை, வாலாஜாபாத் |
மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை |
4. |
உத்திரமேரூர் |
அரசு பொது
மருத்துவமனை, உத்திரமேரூர் |
மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை |
5. |
குன்றத்தூர் |
அரசு ஆரம்ப சுகாதார
மையம், குன்றத்தூர் |
மாதத்தின் நான்காம்; வெள்ளிக்கிழமை |
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இம்முகாம்களில் கலந்துகொண்டு அரசுத் திட்ட நன்மைகளைப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.