காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் (LKG) 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான RTE (Right to Education) ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025–26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009ன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG) 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க முடியும். சேர்க்கை நடைமுறைகள் RTE ACT 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள் 2011 அடிப்படையில் நடைபெறும்.
RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக 17.10.2025 வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே அந்த பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்கான 10 நாள் காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான
மாணவர் ( RTE ) சேர்க்கை அட்டவணை
வ.எண் |
நாள் |
சேர்க்கை நடவடிக்கை |
1 |
நாள் 1 06.10.2025 |
மாணவர் சேர்க்கை
அறிவிப்பு வெளியீடு |
2 |
நாள் 2 07.10.2025 |
30.09.2025 நிலவரப்படி நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை
பதிவேற்றம். |
3 |
நாள் 3 08.10.2025 |
மொத்த மாணவர்
எண்ணிக்கையில் 25% ஒதுக்கீடு,
பள்ளி (EMIS LOGIN) உள்
நுழைவில் காட்டப்படுதல். |
4 |
நாள் 4 09.10.2025 |
தகுதியுடைய
மாணவர்களின் விவரங்கள் ( ஆதார், பிறப்பு / இருப்பிடம் / வருமானம் மற்றும்
சாதிச்சான்றிதழ்) பதிவேற்றம் |
5 |
நாட்கள் 5 & 6 10.10.2025 13.10.2025 |
தகுதியான / தகுதியற்ற
விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய
வாய்ப்பு |
6 |
நாள் 7 14.10.2025 |
தகுதி பெற்ற மாணவர்
இறுதி பட்டியல் வெளியீடு |
7 |
நாள் 8 15.102025 |
தகுதியுடைய மாணவர்களை
Emis Portalல் உள்ளீடு செய்தல் |
8 |
நாள் 9 16.10.2025 |
விண்ணப்பங்கள் 25% ஐ மீறினால் சிறப்பு
முன்னுரிமைப் பிரிவுகளுக்கு பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவித்தல் |
9 |
நாள் 10 17.10.2025 |
தேர்வு செய்யப்பட்ட
மாணவர்களை Emis Portal இல் உள்ளீடு செய்தல் |