காஞ்சிபுரம், டிச.12:
காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள துணை செவிலியர் பணியிடங்களுக்கு வரும் டிச.25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள துணை செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கத்தின் மூலமாக பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கான விண்ணப்படிவம் மற்றும் விபரங்கள் ட்ற்ற்ல்ள்://ந்ஹய்இட்ங்ங்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்து சுயசான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள்
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
42.ரயில்வே பீடர் ரோடு,
அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,
காஞ்சிபுரம் மாவட்டம் 631501
அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்
நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்.. பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
.png)

