உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 
                       
1. உலகமே
வறுமையுற்றாலும் 
கொடுப்பவன் அதியன் என்றவர் ——–.
    அ) நச்செல்லையார்    
                                  
ஆ)  ஒளவையார்
    இ)
காக்கை பாடினி
                                      
ஈ)  வெள்ளி வீதியார்   
2. மேன்மை தரும் அறம் என்பது———.
    அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது 
   
ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
    இ) புகழ்
கருதி அறம் செய்வது
ஈ)
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
3. உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்
    கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ)
உதியன் சேரலாதன்
                  
            ஆ) அதியன் பெருஞ்சாத்தன்
இ)  பேகன் கிள்ளி வளவன்             
            உ) நெடுஞ்செழியன் திருமுடிக்காரி
4. சங்க
இலக்கிய அறங்கள் இயல்பானவை. ‘கவிதை
வாழ்க்கையின் திறனாய்வு’
    என்று
கூறியவர் யார்?
அ)
அர்னால்டு
                                
            ஆ) ஏணிச்சேரி முடமோசியார்
இ)
ஜி.யு. போப்
                                
            ஈ) மாங்குடி மருதனார்
5. இம்மை
செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன்
    என்று
வள்ளல் ஆய் அவர்களைப்  பாராட்டியவர்
யார்?
அ)
ஊன்பொதி பசுங்குடையார்      
            ஆ) மாங்குடி மருதனார்
இ) ஆவூர்
மூலங்கிழார்
                                
ஈ)
ஏணிச்சேரி முடமோசியார்
6. சங்கப்பாக்களில்
அறம் பற்றிய அறிவுரைகள் யாரை முதன்மைப்படுத்தி
    கூறப்பட்டுள்ளன
?
அ) அரசர்கள்
           ஆ) அமைச்சர்கள் 
     இ)
புலவர்கள்
          ஈ) வள்ளல்கள்
7. அரசர்கள்
அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்
    என்று
கூறியவர் யார்?
அ) ஆவூர்
மூலங்கிழார்
                    
            ஆ) ஏணிச்சேரி முடமோசியார்
இ)
மாங்குடி மருதனார்
                    
            ஈ) ஊன்பொதி பசுங்குடையார்
8. நன்றும்
தீதும் ஆய்தலும்,
அன்பும் அறனும் காத்தலும்
அமைச்சர் கடமை என்று
    கூறும்
நூல் எது?
அ)
அகநானூறு
         ஆ) புறநானூறு         இ) மதுரைக்காஞ்சி          
ஈ) பட்டினப்பாலை
9. செம்மை
சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?
அ)
ஏணிச்சேரி முடமோசியார்        
            ஆ) மாங்குடிமருதனார்
இ) ஆவூர்
மூலங்கிழார்
                                
ஈ) ஊன்பொதி பசுங்குடையார்
10.‘எரியார்
எறிதல் யாவணது எறிந்தார் எதிர்சென்று எறிதலும் செல்லான்’ என்று       
     குறிப்பிடும் நூல்?
அ)
அகநானூறு
        ஆ) புறநானூறு       இ) மதுரைக்காஞ்சி     ஈ) பட்டினப்பாலை
11. ‘செல்வத்தின்
பயனே ஈதல்’ எனக் குறிப்பிடும்  நூல் ——–.
 அ)
அகநானூறு
       ஆ) பட்டினப்பாலை
            இ) மதுரைக்காஞ்சி   ஈ) புறநானூறு
12. “இல்லோர்
ஒக்கல் தலைவன்”
“பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம்
       போற்றப்படுபவர் யார்?
 அ)
அரசர்கள்
           ஆ) அமைச்சர்கள் 
    இ)
புலவர்கள்
           ஈ) வள்ளல்கள்
13. வழங்குவதற்குப்
பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுப்பவர்
      யார்?
 அ) பிடவூர்க்கிழான்
மகன் பெருஞ்சாத்தன்   
           ஆ) ஏணிச்சேரி முடமோசியார் 
 இ) ஆவூர்
மூலங்கிழார்
                             
            ஈ) மாங்குடி மருதனார்
14.  உதவி
செய்தலை 
உதவி ஆண்மை என்று கூறியவர் ——–.
 அ) ஈழத்துப் பூதன்தேவனார்
               
ஆ) ஏணிச்சேரி முடமோசியார் 
 இ) ஆவூர்
மூலங்கிழார்
                             
ஈ) மாங்குடி மருதனார்
15. வாய்மையை
பிழையா நல் மொழி என்று குறிப்பிடும் நூல் ——–.
 அ)
அகநானூறு
       ஆ) புறநானூறு         இ) நற்றிணை
        ஈ) பட்டினப்பாலை
16. ‘வீட்டைத்
துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி
குறிப்பிடுவது ——–.
 அ) காலம்
மாறுவதை
                                            
ஆ) வீட்டைத் துடைப்பதை
 இ) இடையறாது அறப்பணி செய்தலை
       
            ஈ) வண்ணம் பூசுவதை
17. கோடை
வயல், மீட்சி விண்ணப்பம் கவிதைத்
தொகுப்புகளின் ஆசிரியர் —-.
 அ)
கண்ணதாசன்
                          
                       
ஆ) ஜெயகாந்தன் 
 இ) தி.சோ.வேணுகோபாலன்  
                       
ஈ) புதுமைப்பித்தன்
18.  எழுத்து
காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்——-.
 அ) தி.சோ.வேணுகோபாலன்  
           
            ஆ) ஜெயகாந்தன் 
 இ)
கண்ணதாசன்                                       
            ஈ) புதுமைப்பித்தன் 
19.  தி.சோ.வேணுகோபாலன்
பிறந்த ஊர் ——-.
 அ) திருவையாறு    ஆ)
சிறுகூடல்பட்டி
             இ) உறுவையாறு    
ஈ) தஞ்சாவூர்
20.  காலக்கணிதம்
கவிதையில் இடம்பெற்ற தொடர்——.
 அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
 ஆ)
என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
 இ)
இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
 ஈ)
என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
21. கண்ணதாசன்
இயற்பெயர் ———.
அ)
தி.சோ.வேணுகோபாலன்        
                       
ஆ)
முத்தையா
இ)
எத்திராசு 
                                              
            ஈ) ராஜநாராயணன்
23. கண்ணதாசனின்
பிறந்த ஊர் ——–.
அ)
திருவையாறு
                             
                       
ஆ) சிறுகூடல்பட்டி
இ)
உறுவையாறு
                
                                   
ஈ) தஞ்சாவூர்
24. சேரமான்
காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் —.
அ)
புதுமைப்பித்தன்
                                   
            ஆ) ஜெயகாந்தன் 
இ)
தி.சோ.வேணுகோபாலன்        
                       
ஈ) கண்ணதாசன் 
25. தமிழக
அரசின் அரசவைக் கவிஞராக விளங்கியவர்—-.
அ)
புதுமைப்பித்தன்
                                   
            ஆ) கண்ணதாசன் 
இ)
தி.சோ.வேணுகோபாலன்        
                       
ஈ) ஜெயகாந்தன் 
26.‘மாற்றம்
எனது மானிடத் தத்துவம்’ என்று
கூறியவர் —–.
அ)
புதுமைப்பித்தன்
                                   
            ஆ) கண்ணதாசன் 
இ)
தி.சோ.வேணுகோபாலன்        
                       
ஈ) ஜெயகாந்தன் 
27. சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்——–.
 அ)
வெண்பா
           ஆ) அகவற்பா
        இ) கலிப்பா   ஈ)
வஞ்சிப்பா 
28. யாப்பின்
உறுப்புகள் 
———- வகைப்படும்
 அ) ஐந்து
                 
ஆ) ஆறு                   
இ) ஏழு
                     
ஈ) எட்டு  
29. வெண்பாவிற்குரிய
ஓசை ——–.
 அ) செப்பலோசை      ஆ) அகவலோசை      இ)துள்ளலோசை     ஈ) தூங்கலோசை  
30. திருக்குறளும்
நாலடியாரும் ——–
பாவால் அமைந்துள்ளன
 அ) வெண்பா           ஆ)ஆசிரியப்பா
           இ) கலிப்பா          
  ஈ)
வஞ்சிப்பா 
31. ஆசிரியப்பாவிற்கு
உரிய ஓசை ———–.
 அ)
செப்பலோசை  
ஆ) அகவலோசை    இ)துள்ளலோசை    
ஈ) தூங்கலோசை  
32. இலக்கணக்
கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும்
      இருப்பது ———-.
 அ)
வெண்பா
           ஆ)ஆசிரியப்பா
         இ) கலிப்பா       ஈ) வஞ்சிப்பா 
33. செய்யுளில்
இடையிடையே உயர்ந்து வருவது
 அ)
செப்பலோசை  
ஆ) அகவலோசை   இ)துள்ளலோசை   ஈ) தூங்கலோசை  
34. கலிப்பாவிற்கு
உரிய ஓசை ———.
 அ)
செப்பலோசை   
ஆ) அகவலோசை   இ)துள்ளலோசை    ஈ) தூங்கலோசை  
35. வஞ்சிப்பாவிற்கு
உரிய ஓசை ———.
 அ)
செப்பலோசை   
ஆ) அகவலோசை   இ)துள்ளலோசை    
ஈ)
தூங்கலோசை  
36. வெண்பா ——– வகைப்படும் .
 அ) 3 
            ஆ)4   
            இ)  5 
          
            ஈ) 6 
37. ஆசிரியப்பா
வகைப்படும்
 அ) 3 
            ஆ)4              
இ)  5             
ஈ) 6  
38.  2 அடி
முதல் 12 அடி வரை அமையும் பாவகை ——-.
 அ) வெண்பா          ஆ)ஆசிரியப்பா
                   
இ) கலிப்பா   ஈ) வஞ்சிப்பா 
39.  மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும் பாவகை ——–.
 அ)
வெண்பா
           ஆ)ஆசிரியப்பா
                
இ) கலிப்பா   ஈ) வஞ்சிப்பா 
40.  இருவர்
உரையாடுவது போன்ற ஓசை
 அ) செப்பலோசை   ஆ)
அகவலோசை
   இ)துள்ளலோசை   ஈ) தூங்கலோசை  
41.  ஒருவர்
பேசுதல் மற்றும் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை ——–.
 அ)
செப்பலோசை  
ஆ) அகவலோசை    இ)துள்ளலோசை   ஈ) தூங்கலோசை  
42. ‘ இம்மை செய்தது
மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன்’ –இப்பாடல்
 அடி
இடம்பெற்றுள்ள நூல் ———-.
 அ)
அகநானூறு
       ஆ) புறநானூறு       இ) மதுரைக்காஞ்சி     ஈ) பட்டினப்பாலை
1. ஏகாரத்தில் முடிந்தால் சிறப்பினைப் பெறும் பா எது?
அ)
வெண்பா
            ஆ)ஆசிரியப்பா
         இ) கலிப்பா       ஈ) வஞ்சிப்பா 
2. வெண்பாக்கள்
——– வகைப்படும்.
அ)
இரண்டு              
                       
ஆ) மூன்று
இ)
நான்கு     
                                   
ஈ) ஐந்து
3. ஆசிரியப்பாக்கள்
——– வகைப்படும்.
அ)
இரண்டு              
                       
ஆ) மூன்று
இ)
நான்கு   
                                   
ஈ) ஐந்து
4. ஓரசைச்
சீர்கள் மொத்தம் எத்தனை?
அ)
நான்கு                                      
ஆ) எட்டு
இ)
பதினாறு 
                                   
ஈ) இரண்டு
5. ஈரசைச்
சீர்கள் மொத்தம் எத்தனை?
அ)
நான்கு                                      
ஆ) எட்டு
இ)
பதினாறு 
                                   
ஈ) இரண்டு
6. மூவசைச்
சீர்கள் மொத்தம் எத்தனை?
அ)
நான்கு   
                       
         
ஆ) எட்டு
இ)
பதினாறு 
                                   
ஈ) இரண்டு
7. மாச்சீரும்
விளச்சீரும் 
——– சீர்கள் ஆகும்.
அ)
ஓரசைச்  
                                   
ஆ)
ஈரசைச்
இ)
மூவசைச்                                     
ஈ) நான்கசைச்
பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
      மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
      மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
      எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
      என்ப தறிந்து ஏகுமென் சாலை !
      தலைவர் மாறுவர் ; தர்பார்
மாறும்;
      தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் !
1. இப்பாடலின்
ஆசிரியர்——-.
அ)பாரதிதாசன்
           ஆ) கண்ணதாசன் 
   இ)வாணிதாசன்
    ஈ)
முடியரசன்
2. இப்பாடல்
இடம்பெற்ற நூல்———.
அ)கோடை
வயல்
               
            ஆ) கண்ணதாசன் கவிதைகள் 
இ)தேம்பாவணி
                  
            ஈ) மீட்சி விண்ணப்பம்
3. பாடலில்
இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.
அ) மாற்றம்
– தத்துவம்
                  
ஆ) மாறும் – மகத்துவம் 
இ) தீமை – நன்மை              
            ஈ) மாற்றம் – மாறும்
4. பொருள்
தருக – மகத்துவம்.
அ) நன்மை     ஆ) பெருமை           
இ) ஏற்றம்
      ஈ)
மாற்றம்
குறுவினாக்கள்
1. குறிப்பு வரைக. – ‘அவையம்’
- அறம் கூறும் மன்றங்களுக்கு அவையம் என்று பெயர்.
- அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
- ‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ என்கிறது 
     புறநானூறு.
- உறையூரிலிருந்த அறம் கூறும்  அவையம்
     தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
2. ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க; உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’
            அ) அடி எதுகை எடுத்து எழுதுக
               ஆ) இலக்கண   குறிப்பு எழுதுக 
அ) அடி
எதுகை         
                      
–    கொள்வோர்
, உள்வாய்
ஆ)
இலக்கண குறிப்பு  
- கொள்க,  குறைக்க
                  
     – வியங்கோள் வினைமுற்றுகள்
- கொள்வோர், குரைப்போர்
     – வினையாலனையும் பெயர்கள்.
- உடம்பு தொடாது
                    
     – இரண்டாம் வேற்றுமைத்தொகை.
3. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
- வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளால் வரும்.
- முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும்
     அமைந்து, ஒரு விகற்பத்தையோ இரண்டு விகற்பத்தையோ பெற்று
     வரும்.
எடுத்துக்காட்டு:    
          அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு
4. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு  உரியது.
     
        இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து
எழுதுக.
வஞ்சிப்பாவிற்கு
தூங்கல் ஓசையும்,
கலிப்பாவிற்குத் துள்ளல்
ஓசையும் உரிய ஓசைகளாகும்.
                 
                                                         
(அல்லது)
தூங்கல்
ஓசையும் துள்ளல் ஓசையும் முறையே வஞ்சிப்பாவிற்கும் கலிப்பாவிற்கும் உரிய
ஓசைகளாகும்.
கூடுதல்
வினாக்கள்
38. அறநெறிக் காலம் எது?
- சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம்
     என்பர்.  
39. அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டவை எவை?
- செங்கோல்
- வெண்கொற்றக்குடை 
40. அரசனின் கடமைகளாக  சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை ?
- நீர்நிலை பெருக்குதல்
- நிலவளம் காணுதல்
- உணவு உற்பத்தியை பெருக்குதல்
- உணவினை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல்
41. தமிழரின் போர் அறம் குறித்து எழுதுக.
- தமிழர் போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் 
     என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர்,
     சீறார், முதியோர்
     ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக்  குறிக்கிறது.
- தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று
     புறநானூற்றில்  ஆவூர்
     மூலங்கிழார் குறிப்பிடுகிறார். 
42. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
- காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக்
     குறிக்கிறது. வயது முதிர்ந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார் ஆசிரியர்
     .
- வாளித் தண்ணீர், சாயக்
     குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை கொண்டு சாளரத்தின் கதவுகளை சுத்தம் செய்வது போல
     காலக்கழுதை கட்டெறும்பான பின்பும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.
24. யாப்பின் உறுப்புகள் யாவை? 
- எழுத்து, அசை,
     சீர், தளை,
     அடி, தொடை என ஆறு வகைப்படும்.
25. நால்வகைப் பாக்கள் யாவை ?
- வெண்பா, ஆசிரியப்பா,
     கலிப்பா, வஞ்சிப்பா,
     என பாக்கள் நான்கு வகைப்படும்.
26. வெண்பாவின் வகைகள் யாவை?
- குறள் வெண்பா, சிந்தியல்
     வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை
     வெண்பா என்று ஐந்து வகைப்படும்.
    27. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை ?
- நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள்
     ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,
     அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகைப்படும்.
சிறுவினாக்கள்
- வாளித் தண்ணீர், சாயக் குவளை,
     கந்தைத் துணி,
     கட்டைத் தூரிகை இச்சொற்களைத்
      
தொடர்புபடுத்தி
ஒரு பத்தி அமைக்க.
- வீட்டின் சுவர், சன்னல்
     போன்றவற்றில் அழுக்கு மற்றும் கரையான் படிவதைத்
      தடுக்க வாளித் தண்ணீர் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு
கழுவ வேண்டும்.
- பிறகு, கந்தை
     துணியால் நன்கு துடைத்து விட வேண்டும் .
- பிறகு,  குவளையில்
     உள்ள சாயத்தைப் பூசி புதுப்பிக்க வேண்டும் .
2. சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவை என்பதற்குச் சில    
         எடுத்துக்காட்டுகள் தருக.
     வணிக நோக்கம் கொள்ளாத அறம் தேவை
              
இப்பிறப்பில் அறம் செய்தால்
அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது. நோக்கமின்றி அறம்
செய்வதே மேன்மை தரும். இன்றைய சூழலில் நாமும் எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு
உதவி செய்தல் வேண்டும்.
அரசியல்
அறம் தேவை
நீர்நிலை
பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச்
செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. இன்று ஆட்சி செய்யும் அரசும் அனைவருக்கும்
அனைத்தும் கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்.
போர்
அறம் தேவை
தமிழர்
போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். இன்று நாடுகளுக்கிடையே நடைபெறும் நேரடி
மற்றும் மறைமுக போரில் அறம் பின்பற்றப்படுவதில்லை. தன் கொள்கைக்காக மனித உயிர்கள்
கொள்ளப்படுகின்றன.  இவை
தவிர்க்கப்பட வேண்டும்.
கொடை
அறம் தேவை
வீரத்தைப்
போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. இன்று உறவினர்களுக்குக் கூட
கொடுக்கும் தன்மை குறைந்துவிட்டது. தம்மால் இயன்றவற்றை மற்றவர்களுக்குக்
கொடுக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வது அவசியம்.                                                        
உதவி
தேவை
பிறருக்கு
உதவுதல் என்பதைச் சிறந்த அறமாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்று பிறருக்கு
உதவி செய்யும் மனப்பான்மை வெகுவாகவே குறைந்து விட்டது. சங்க இலக்கியங்கள் காட்டும்
அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக
உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் உதவுகிறது.
உரைப்பத்தி
வினா- விடை
நாக்கு
ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதும அதுதான்.    துன்பத்தின் கதவைத் திறப்பதும்
அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது.     பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது. ‘பிழையா நன்மொழி’ என்று
வாய்மையை
    நற்றிணை
குறிப்பிடுகிறது.
          அ)  அதிசய திறவுகோல் எது?
          ஆ) நாவை அதிசயத் திறவுகோலாகக்
கூறக்காரணம் என்ன?
          இ)  இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது
வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப்
போர்
செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு,
பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத்
தீங்கு
வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.
தம்மைவிட
வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்
மூலங்கிழார்
குறிப்பிடுகிறார்.
அ)
போரிலும் அறநெறிகளைப் பின்பற்றியவர் யார்?
           தமிழர்
ஆ) போர்
அறம் என்பது யாது?
போர்
அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சீறார், முதியோர்
ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
இ)
இவ்வுரைப் பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
          போர் அறம்
நெடுவினாக்கள்      
1. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
       ( மாணவன்  – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க   
       வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும்
வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் –
       குப்பையைக் கிளறினாலும் தனது உணவை
மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி –
       கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின்
சுவையை உணரமுடியும்  – ஆசிரியர்
       விளக்கம்  –  மாணவன் மகிழ்ச்சி.)
அஃறிணையைப்
பார்த்தாவது அறிவை வளர்க்க!
காட்சி – 1
இடம்                            
: வகுப்பறை
பங்கேற்பாளர்கள்     
: ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
(ஆசிரியர்
வகுப்பறைக்குள் நுழைகின்றார். மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று வணங்குகின்றனர்)
ஆசிரியர்
: வணக்கம். அனைவரும் அமருங்கள்!
இனியன் :
ஐயா, இன்று என்ன பாடம் நடத்தப்போகிறீர்கள்?
ஆசிரியர்
: இன்று புத்தகத்தில் உள்ள பாடத்தை நடத்தாமல் வாழ்க்கைப் பாடத்தை
                 
நடத்தப்போகிறேன்.
இனியன் :
ஐயா, அடுத்த வாரம் மாதத்தேர்வு
வரப்போகிறதே! 
இன்னும் ஒரு பாடம்
                
நடத்தாமல் இருக்கிறீர்கள்!
ஆசிரியர்
: நீங்கள் மதிப்பெண்களை மட்டும் எடுத்தால் போதுமா? அன்றாட
                
வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான அடிப்படைச்
செயல்பாடுகளையும் 
                
சூழலை எதிர்கொள்ளும் திறனையும்
புரிதல்களையும் 
பெற வேண்டாமா?
முகிலன்   : அதுவும்தான் அவசியம் தேவை.
ஆசிரியர்
: சரி! சரி! 
நாம் அனைவரும் இப்போது
அருகிலிருக்கும் பூங்காவுக்குச்
                
செல்வோம் வாருங்கள்!
(ஆசிரியரும்
மாணவர்களும் 
மகிழ்ச்சியுடன் பூங்காவிற்குச்  செல்கின்றனர்)
                                                    
            காட்சி – 2
இடம்
                      
: பூங்காவிற்குச்
செல்லும் வழி
பங்கேற்பாளர்கள்     
: ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
நிறைமதி
: ஐயா, அங்கு பாருங்கள்! ஆற்றில் கொக்குகள்
மீன்களைப் பிடிக்காமல்
                 
நின்றுகொண்டுள்ளன.
ஆசிரியர்
: இல்லை நிறைமதி! கொக்குகள் தனக்கு இரையாகிய பெரிய மீனின்
                 
வருகைக்காகக்
காத்துக்கொண்டுள்ளன.  மீன்
வந்தவுடன் காலம்
                 
தாழ்த்தாமல் உடனே
பிடித்துக்கொள்ளும்.  கொக்கைப்
போல நாமும் எந்த
                 
ஒரு செயலைச் செய்ய நினைத்தாலும்
உரிய காலம் வரும் வரையில்
                 
காத்திருக்க வேண்டும். உரிய
காலம் வந்தவுடன் விரைந்து அச்செயலை
                 
முடித்துவிட வேண்டும்.
நிறைமதி
: கொக்கை வைத்து ஒரு தத்துவத்தையே சொல்லிவிட்டீர்கள் ஐயா!
முகிலன்  : ஐயா, அதோ பாருங்கள் கோழி குப்பையைக் கிளறிக்கொண்டுள்ளது.
இனியன் :
இதில் என்ன வியப்புள்ளது?
ஆசிரியர்
: வியப்பல்ல. தத்துவம் உள்ளது.
இனியன் :
என்ன சொல்கிறீர்கள் ஐயா?
ஆசிரியர்
: கோழி நாள்முழுவதும் குப்பையைக் கிளறினாலும் அது தனக்கான
                
உணவை மட்டும்தான்
எடுத்துக்கொள்ளும். அதுபோலவே எதிர்மறையில்
                
இயங்கிக்கொண்டிருக்கும்
இவ்வுலகில் நாமும்கூட வாழ்க்கைக்கு நலம்
                
தரும் நன்மையை மட்டுமே
எடுத்துக்கொள்ள வேண்டும்.
இனியன் :
சிறப்பான தத்துவம் ஐயா!
ஆசிரியர்
: சரி! சரி! நீண்ட தூரம் நடந்து வந்ததில் சோர்வாக இருப்பீர்கள்.  அந்த
                
கடைக்குச் சென்று சுவையான   சுண்டலை உண்ணலாம் வாருங்கள்!
                                                    
            காட்சி – 3
இடம்
                      
: உணவகம்
பங்கேற்பாளர்கள்     
: ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
(மாணவர்களும்
ஆசிரியரும் 
சுண்டல் உண்கின்றனர்.)
இனியன்:
ஐயா, உப்பு சற்று  அதிகமாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
ஆசிரியர்
: ஆம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பொறுத்துக்கொள்.
நிறைமதி
: ஐயா எந்த உணவாக இருந்தாலும் அதில் உப்பு எவ்வளவு இருக்கும்
                 
என்பதைப் பார்த்தவுடன் கூற
முடியவில்லையே ஏன் ஐயா?
ஆசிரியர்:  உப்பு கரைந்து விடுவதால் பார்வைக்குத்
தெரியாது. ஆனால் அதன்
                
தன்மையை உணர முடியும்.
மனிதர்களின் குணமும் அதுபோலத்தான்
                
கண்களால் காண இயலாது. ஆனால்
அவர்களின் செயல்களால் அதைக்
                
கண்டுவிடலாம்.
நிறைமதி
: இப்போது நன்றாகப் புரிகிறது ஐயா!
ஆசிரியர்
: சரி! சரி! வாருங்கள் பூங்காவினுள் செல்லாம்!
                
(பூங்காவினுள் அனைவரும்
செல்கின்றனர். )
காட்சி – 4
இடம்
                      
: பூங்கா
பங்கேற்பாளர்கள்     
: ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
ஆசிரியர்
:  மாணவர்களே, நாம் வந்த வழியில் கண்ட காட்சிகளிலிருந்து நீங்கள்
                 
கற்றுக்கொண்டது என்ன?
முகிலன்
:  அஃறிணை உயிர்கள் என்று கூறும்
அவைகளிடமிருந்தும்  நாம்
அதிகம்
                 
கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
ஆசிரியர்
: உண்மைதான். நீங்கள் இனிமேல் பார்க்கும் ஒவ்வொரு காட்சியின் பின்பும்
                
உள்ள உண்மைகளைப் புரிந்துகொள்ள
வேண்டும். இப்போது சென்று
                
விளையாடுங்கள்.
(மாணவர்கள்
விளையாடச் செல்கின்றனர். ஆசிரியர் அமைதியான இடத்தில் அமர்கின்றார்.)
மொழிப்பயிற்சி
1.மொழிபெயர்க்க.
(மொ.ஆ) 
Once upon a time there were two beggars in Rome. The first
beggar used to cry in the  Street of the city, ‘’He is helped whom God
helps”. The second beggar used to cry, “He is helped who the king helps”. This
was repeater by them everyday. The Emperor of Rome heard it so often that he
decided to help the beggar who popularized him in the streets of Rome. He
ordered a  loaf of bread to be baked and filled with pieces of gold. When
the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon
as he met him . The latter carried it home. When he cut the loaf of bread he
found sparkling pieces of gold. Thinking God he stopped begging from that day.
But the other continued to beg through the city. Puzzled by the beggar’s
behavior, the Emperor summoned him to his presence and asked him, “What have
you done with the loaf of  bread that I had send you lately? “The man
replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well
baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped Indeed, “and
turned the beggar out of his palace.   
முன்பு
ஒரு நாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன்
கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான்.
இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழ்ந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான்.
தினமும் இருவரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.  ரோம் அரசர் தன்னைப் பற்றிப் பேசிப்
புகழ்ந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ
விரும்பினார். நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித்
துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்து கொடுத்தான். இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டு
பொட்டலம் கனமாக இருக்கிறது; விற்றால்
பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்று விடுகிறான்.
இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம்
பிச்சைக்காரன் ரொட்டித் துண்டை வெட்டி பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.
தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான்.
பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான். இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதிகளில்
பிச்சை எடுத்துக் கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டிப்
பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார். அது எடுத்துச் செல்ல கனமாக
இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்று விட்டேன் என்றான். மன்னர்
தனக்குள் நினைத்துக் கொண்டார். “கடவுள்
தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, சரி! நீ போகலாம் என்று அரண்மனையில் இருந்து வெளியேறச்
சொன்னார்.     
2. மரபுத்தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக. (மொ.ஆ)
மனக்கோட்டை
–  கற்பனையில்
ஒரு செயலைச் செய்தல் (நிறைவேறாத ஆசை)
படிக்காமலேயே
தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என மாணவன் மனக்கோட்டைக் கட்டினான்.
கண்ணும்
கருத்தும் – கவனத்தோடு
செயலைச் செய்தல்
கண்ணும்
கருத்துமாய் படித்தால் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாய் வரலாம்.
அள்ளி
இறைத்தல் – அளவில்லாமல்
பயன்படுத்துதல்
ஆடம்பர
செலவுகளுக்கெல்லாம் பணத்தை அள்ளி இறைத்தால்  வறுமை
நம்மை விரைந்து அடையும்.
ஆறப்போடுதல் – அமைதிப்படுத்துதல் [சூழலை  சரியாகக கையாள காலம் எடுத்துக்கொள்ளுதல் (அல்லது) செயலின்  விளைவு பெரிதாகாமல் காத்தல்  (அல்லது) காலந்தாழ்த்துதல்]
தவறு
நிகழ்ந்தபோது அதை ஆறப்போட்டால்  தவறைப்
பெரிதுபடுத்தாமல் காத்தலுடன்  அதன் விளைவையும்  தடுக்கலாம்.
3. பின்வரும் தொடரில் பேச்சுவழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. (மொ.ஆ)
”தம்பீ, எங்கே நிக்கிறே?”
“நீங்க
சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ங்னக்குள்ளயே
டீ சாப்டுட்டு,
பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு… நா வெரசா வந்துருவேன்”
”அண்ணே !
சம்முவத்தையும் 
கூட்டிக்கிட்டு வாங்கண்ணே!
அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
”அவம்பாட்டியோட
வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச்
சின்ன வயசுல பார்த்துதுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப
ஒசரமா வளந்துட்டான்!  ஒனக்கு
அடையாளமே தெரியாது!  ஊர்க்கு
எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை
வையி. நாங் கெளம்பிட்டேன்…”
“ சரிங்கண்ணே”
விடை
”தம்பீ, எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள்
நீங்கள் கூறிய இடத்தில்தான் அண்ணா! எதிர்புறமாக ஒரு தேனீர் கடை இருக்கிறது.”
“அதற்கு
உள்ளேயே தேனீர் அருந்திவிட்டு, செய்தித்தாள்
படித்துக்கொண்டு இரு… நான்
விரைவாக வந்துவிடுவேன்”
”அண்ணா !
சன்முகத்தையும் 
அழைத்துக்கொண்டு வாருங்கள்
அண்ணா! அவனைப் பார்த்தே நீண்ட நாளாயிற்று!”
”அவன் தன்
பாட்டியுடன் 
வெளியூர் போயிருக்கிறான்
(சென்றிருக்கிறான்) . உங்கள் ஊருக்கே அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்.”
“மிகவும்
சிறிய வயதில் அவனை நான் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான் அண்ணா! அப்போது அவனுக்கு
மூன்று வயது 
இருக்கும்!”
“இப்போது  உயரமாக வளர்ந்துவிட்டான்!  உனக்கு அடையாளமே தெரியாது!  ஊருக்கு என்னுடன் வருவான் பார்த்துக்கொள்!
சரி, அழைப்பைத் துண்டித்துக்கொள். நான்
கிளம்பிவிட்டேன்…”
“ சரி
அண்ணா!”
4. கலைச்சொல் (மொ.வி)
Belief                       
  –           நம்பிக்கை
Philosopher              
            –
          மெய்யியலாளர்
Renaissance             
           –
          மறுமலர்ச்சி
Revivalism                
           –
          மீட்டுருவாக்கம்
5. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மொ.வி)
கொடுப்பதைத்
தடுக்காதே!
செல்வத்தின்
பயன்
இல்லாதோருக்கும்
இயலாதோருக்கும் கொடுத்தலே!
கொடுக்காவிடினும்
கொடுப்பவனையும் கெடுக்காதே!
அன்று
வள்ளல்கள்
கொடுப்பதிலும்
பேதம் பார்ப்பதில்லை!
இன்று
சொற்ப காசுக்கெல்லாம்
பாத்திரம்
அறிய பார்க்கின்றனர்.
தடுக்கும்
குணத்தை மாற்று;
கொடுக்கும்
நிலை உன்னைத் தேடி வரும்!
6.  கண்டுபிடித்து எழுதுக.(மொ.வி)
        ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய
    
        எண்ணுப்பெயர்கள் இடம்பெறும்
திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.
ஒன்று –
         கொன்றன்ன இன்ன செயினும் அவர்செய்த
                       
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
இரண்டு –
     தானம்
தவமிரண்டும் தங்கா வியனுலகம்
                       
வானம் வழங்காது எனின்.
மூன்று –         
காமம் வெகுளி மயக்கம்
இவைமூன்றன்
                       
நாமம் கெடக்கெடும் நோய்.
நான்கு –
         அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
                       
இழுக்கா இயன்றது அறம்.
ஐந்து –
           பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
                       
நெறிநின்றார் நீடு வாழ்வார்.
ஆறு    –
         படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
                       
உடையான் அரசருள் ஏறு
ஏழு     –
          எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
                       
விழுமந் துடைத்தவர் நட்பு.
எட்டு 
–           கோயில் பொறியில் குணமிலவே
எண்குணத்தான்
                       
தாளை வணங்காத் தலை.
பத்து –
            பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த
தீமைத்தே
                       
நல்லார் தொடர்கை விடல்.
7. சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள்  தருக. (மொ.வி)
கானடை
கான் அடை
             
– காட்டைச் சேர் (காட்டை அடை)
கான் நடை
               
– காட்டுக்கு நடத்தல்
கால் நடை
               
– காலால் நடத்தல்
வருந்தாமரை
வருந்தா
மரை
           – வருந்தாத மான்(துன்புறாத மான்)
வரும்
தாமரை
          – மலரும் தாமரை மலர் (ஞாயிற்றைக் கண்டதும் மலரும் தாமரை)
வரும் தா
மரை
         – தாவி வரும்  மான்
பிண்ணாக்கு
பிண்ணாக்கு             
– எள், கடலை முதலியன ஆடும்போது கிடைப்பது.
பிள்
நாக்கு
               
– பிளவுபட்ட நாக்கு
பலகையொலி
பலகை ஒலி
              
– பலகையால் ஏற்படும் ஒலி
பல கை
ஒலி
             
– பல கைகள் எழுப்பும் ஒலி
8. அகாராதியைக் காண்க. (மொ.வி)
ஆசுகவி
                    
– கொடுத்த பொருண்மையில் பாடும்
கவி
மதுரகவி                   
– இனிமை பெருகப் பாடும் கவி
சித்திரகவி                 
– சித்திரங்களில் உள்ளதற்கு ஏற்ப
பாடும் கவி ( 21
நயங்களில் 
                                  
கவிதை  இயற்றுபவர்)
வித்தாரகவி              
– விரித்துப் பாடும் கவி (
விரிவாகப் பாடும் கவி)
9.  நாம்
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால்
     நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன்பயில்வோருடனோ, உடன்பிறந்தோருடனோ  
எதிர்பாராமல்
சச்சரவு ஏற்படுகிறது…. இந்த
சமயத்தில் சினம்கொள்ளத் தக்கச் சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில்
ஈடுபடுகிறோம். இதுகாறும் கற்ற அறங்கள் நமக்குக் கைகொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால்
ஏற்படும் நன்மைகளும்… (நி.அ.த)
|  | அறங்கள் தரும் நண்மைகள் | 
| நல்லச் சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுதல் | நல்ல நண்பர்களைப் பெறலாம்; எதிரிகளையும்  நண்பர்களாக்கலாம். | 
| ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் மாற்றிப் பேசாதிருத்தல் | பகைமை இருக்காது; எல்லோரும்
  அன்புடன் பழகுவர். | 
| பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல் | எதிரிகளும் தன் செயலால் நாணப்பட்டு வருந்தி, நம்மிடமே  நட்பாகிவிடுவர். | 
| உண்மைப் பேசுதல் | தீமை வராது; எல்லோரும் நம்புவர்; நட்பு வட்டம் விரிவடையும். | 
.
.png)

