அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்கும் புதிதாகத் திட்டமிடப்பட்ட Franchisee Outlets திட்டத்தின் கீழ் Franchisee Outlets-களைத் திறக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள்/அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்களை அஞ்சல் துறை வரவேற்கிறது.
இந்த Franchisee Outlets மூலம் பின்வரும் சேவைகள் வழங்கப்படும்:
- தபால் தலைகள் விற்பனை
- துரித அஞ்சல் முன்பதிவு
- பதிவு அஞ்சல் முன்பதிவு
- பணவிடைகள் (Money Orders)
- பல்வேறு சில்லறை அஞ்சல் சேவைகள்
இது குறிப்பாக தபால்நிலையங்கள் குறைந்த அல்லது இல்லாத பகுதிகளில் அஞ்சல் வசதிகளை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
தகுதி அளவுகோல்
- பொருத்தமான வளாகங்கள் கொண்ட இந்திய குடிமக்கள்/அமைப்புகள்
- அஞ்சல் நடவடிக்கைகளின் அடிப்படை அறிவு (basic knowledge)
- தேவையான உள்கட்டமைப்புடன் முதலீடு செய்ய விருப்பம் உள்ளோர்
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்:
- விண்ணப்ப படிவத்தை முறையாக நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட அஞ்சல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- விரிவான வழிகாட்டுதல், தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள அஞ்சல் கோட்டங்களில் கிடைக்கும்.
- விண்ணப்ப படிவங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்:
https://utilities.cept.gov.in/DOP/ViewUploads.aspx?uid=10
கடைசி தேதி: 17.10.2025
தொடர்புக்கு
நா. ராஜகோபாலன்
அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்
வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர் – 632001
📞 0416-2220350