காஞ்சிபுரம் :
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
தீபாவளிப்பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் இ.சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் வரும் அக்.15 ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி,கடையின் பரப்பு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான புளூபிரிண்ட் வரைபடம் மொத்தம் 6 நகல்கள்,கடை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம் இணைத்திருக்க வேண்டும்.
உரிமக்கட்டணம் ரூ.500 ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான்,மனுதாரரின் இருப்பிடத்திற்கான ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை,குடும்ப அட்டை,வரி ரசீது,இரு பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஆகியனவும் இணைக்கப்பட வேண்டும்.
நிரந்தரப்பட்டாசு உரிமம் கோருபவராக இருந்தாலோ அல்லது வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுவதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)
