இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
குடும்ப ஆண்டு வருமானம் :
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் (Central Universitites) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் (BC, MBC/DNC) சார்ந்த மாணவ- மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம் , சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், சென்னை-5 / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவராகிறார்.
மேலும் 2025-26ஆம் நிதியாண்டிற்கான புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் (with Bonafide Certificate) தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இனத்தவருக்கு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கும், பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 30.09.2025-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிற்படுத்தப்பட்டோர் மாணவ/மாணவியர் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி எண்.044-29515942
மின்னஞ்சல் முகவரி : tngovtiitscholarship@gmail.com
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு மாணவ/மாணவியர் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்,
எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி எண்.9445477817
மின்னஞ்சல் முகவரி : mbcdnciitscholarship@gmail.com
For English Reader
Kanchipuram District Collector Kalaichelvi Mohan, IAS, has announced that Backward Class (BC), Most Backward Class (MBC/DNC) students from Tamil Nadu pursuing higher education in IIT, IIM, IIIT, NIT and Central Universities can now apply for the 2025-26 Central Government Scholarship under Fresh and Renewal Applications.
Eligible students whose annual family income does not exceed ₹2.50 lakhs can receive reimbursement of tuition fees, special fees, exam fees, and other compulsory fees, up to a maximum of ₹2 lakhs per year.
- Last date for Renewal Applications: 30.09.2025
- Last date for Fresh Applications: 31.10.2025
Students can download the application form from the official website: https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes
Applications must be submitted through their institutions with the Bonafide Certificate and forwarded to the respective department:
📌 BC Students – Commissioner, Backward Classes Welfare Directorate, Chennai-5
📌 MBC/DNC Students – Commissioner, MBC & DNC Welfare Directorate, Chennai-5
📞 Contact Numbers: 044-29515942 (BC) | 9445477817 (MBC/DNC)
📧 Emails: tngovtiitscholarship@gmail.com | mbcdnciitscholarship@gmail.com
The Collector further clarified that students already benefiting from other Central or State scholarships will not be eligible for this scheme.