வேலூர் :
வேலூர் மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.10.2025 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காலியிட விவரங்கள்:
தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான பதவிகள், அவற்றிற்கான கல்வித் தகுதி, மொத்த காலியிடங்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கப்படும் தொகுப்பூதியம் கீழே வழங்கப்பட்டுள்ளன
1. மருந்தாளுநர் - D.Pharm - 1 - 15000
2. நுண் கதீர்வீச்சாளர் - DRDT - 1 - 15000
3. ஆய்வக நுட்புநர் நிலை II - DMLT - 1 - 15000
4. இயன் முறை சிகிச்சையாளர் நிலை II - BPT - 1 - 15000
5. மகப்பேறு உதவியாளர் - AUXILIARY NURSE AND MIDWIFE - 1 - 15000
மொத்தம் - 5
விண்ணப்பிக்கும் முறை:
1.விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, விண்ணப்பிக்கும் பதவிக்குறிய கல்விச்சான்று, அசல் மற்றும் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்ட சான்று
2.விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஓப்புதல் கடிதம் (Under Takng) அளிக்க வேண்டும்.
4.முன் அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்குரிய சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
இணை இயக்குநர்,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,
இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,
வேலப்பாடி, வேலூர் மாவட்டம்- 632001.