காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள் (Mental Health Establishments), 2017 ஆம் ஆண்டின் மனநல பராமரிப்பு சட்டத்தின் படி, மாநில மனநல ஆணையத்தில் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் / நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
For English readers :
The Kanchipuram District Collector, Mrs. Kalaichelvi Mohan, IAS, has directed that all mental health establishments in the district — including psychiatric hospitals, de-addiction treatment centres, rehabilitation homes for persons with mental illness, and rehabilitation centres for those affected by substance abuse — must be registered with the Tamil Nadu State Mental Health Authority within one month as per the Mental Healthcare Act, 2017.
Unregistered institutions must apply within the stipulated time to:
The Member Secretary,
Tamil Nadu State Mental Health Authority,
Government Institute of Mental Health Campus,
Medavakkam Tank Road, Kilpauk,
Chennai – 600 010.
📞 044-2642 0965 | ✉ tnsmha@gmail.com
Application forms can be downloaded from:
https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php
or obtained directly/by post from the Authority’s office.
Failure to register within one month will result in legal action against the institutions operating without a valid licence.