தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வேலூர் வீட்டு வசதி பிரிவின் மூலம் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று மாதத் தவணை செலுத்தாத பயனாளிகளுக்கு, அரசாணை (நிலை) எண்.116, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (நி.எ.2-1) துறை, நாள்.04.08.2025-ன்படி கீழ்கண்ட வட்டி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
1. மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
2. வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
3. நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்குண்டான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
மேற்கண்ட சலுகை மூலம் 31.03.2015-க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள், இந்த சிறப்பு சலுகையினை பயன்படுத்தி நிலுவைத்தொகை முழுவதும் ஒரே தவணையாக செலுத்தி, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்கு கிரயப்பத்திரம் பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, இ. ஆ. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு தொலைப்பேசி எண்:0416-2252561. மேலாளர், விற்பனை (ம) சேவை:93808 71499. உதவி வருவாய் அலுவலர் :94428 08967 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.