காஞ்சிபுரம் :
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 22.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுகளை நடத்த உள்ளன. பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் தேர்வில் பங்கேற்கலாம்.
18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 22.08.2025 அன்று காலை 09.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
.png)
.jpg)