காஞ்சிபுரம் :
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டைக்கு ஒப்பளிக்கப்பட்ட செவிலியர் (Staff Nurse) பணியிடத்தினை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் (பதவி முற்றிலும் தற்காலிகமானது.
11 மாதங்கள்) பணியிடங்களை பணிநியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் 22.07.2025 அன்று மாலை 05.45 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501 அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.
அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.