காஞ்சிபுரம் :
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் 19 விடுதிகளுக்கு 2025 – 2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை நல்லோசை மென்பொருள் மூலம் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர், விடுதிகள்-10, (காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஈஞ்சம்பாக்கம், செங்காடு, களியாம்பூண்டி, திருமுடிவாக்கம், திருப்புகுழி, பெருநகர், ரெட்டமங்கலம் மற்றும் உத்திரமேரூர்)
பள்ளி மாணவியர் விடுதிகள்-2 (காஞ்சிபுரம், வாலாஜாபாத்)
கல்லூரி மாணவர் விடுதிகள்-4 (காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், சோமங்கலம், மற்றும் குன்றத்தூர்)
கல்லூரி மாணவியர் விடுதிகள்-3, (காஞ்சிபுரம், ஈஞ்சம்பாக்கம், திருப்பெரும்புதூர்) ஆகிய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
தகுதிகள்:
1. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. தங்கியுள்ள வீட்டிற்கும் விடுதிக்கும் இடையே உள்ள தூரம் 5 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும்.
விடுதிகளில் அளிக்கப்படும் வசதிகள்
1. 4-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சத்தான உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம்.
2. பாயுடன் கூடிய மெத்தை, போர்வை, உறையுடன் கூடிய தலையணைகள், எவர்சில்வர் தட்டு, டம்ளர் மற்றும் பக்கெட் வழங்கப்படுகிறது,
3. சோப்பு, எண்ணெய், பற்பசை போன்ற 7 பொருட்கள் அடங்கிய சுகாதார நன் பராமரிப்பு பொலிவு அடங்கிய தொகுப்பு.
4. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி.
5. நூலக வசதி, இணையவழி சேவையுடன் கூடிய கணினி வசதி.
6. மருந்துகள் அடங்கிய முதலுதவிப் பெட்டி, விளையாட்டு உபகரணங்கள்
7. பாதுகாப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
8. மாணாக்கர்களின் ஆங்கில பேச்சாற்றல் திறனை மேம்படுத்த Spoken English வகுப்புகள் திறன் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
9. அனைத்து மாணாக்கர்களுக்கும் வருடத்திற்கு 4 முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
10. விடுதிகளில் பயிலும் மாணவியருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் நல்வழி வகுப்புகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன.
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விருப்பமுள்ள மாணாக்கர்கள் நல்லோசை விடுதி மென்பொருள் (nallosai.tn.gov.in) இணைய வழியாகவோ அல்லது விடுதி காப்பாளர் உதவியுடன் நேரடியாகவோ விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.