தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

மாற்றுத் திறனாளிகள் ஒருவரும் புறக்கணிக்கப்படக்கூடாது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளதாவது,
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஒருவர் கூட விடுபடாமல் அவர்களது தேவைகளான ஆரம்ப நிலை பயிற்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துதல் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை இலகுவாகவும் பூர்த்தி செய்தல், ஆரம்ப நிலை பயிற்சிகள் மையங்கள் சிறப்பு பள்ளிகள், போன்ற எண்ணற்ற பணிகளை 120 களப்பணியாளர்கள் வட்டார, நகர அளவில் பயனாளிகள் இருப்பிடத்திற்கே சென்று ஆய்வு செய்து கணினி வாயிலாக தேவைகளை மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைந்து சேவைகள் வழங்குவதை துரிதப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோட்ட அளவில் இரண்டு ஒருங்கிணைந்த சேவை மையங்களும், வட்டார அளவில் 12 ஒருங்கிணைந்த சேவை மையங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கு னுழுசுஊயுளு தொண்டு நிறுவனத்தின் மூலம் களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
களப்பணியில் விவரங்கள் சேகரிக்க வரும் பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்புடன் விவரங்களை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.