காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதிச் சான்று, ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் (இரண்டாம் தளம்) 30.06.2025 மாலை 5.45-க்குள் ஒப்படைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வித்தகுதி மற்றும் வயது தற்போதைய நடைமுறைகளில் உள்ள விதிகளின்படி பின்பற்றப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், இல்லை எனில் மாவட்டத்திற்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
- முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.18,000/- கணினி பயிற்றுநருக்கு ரூ.15,000/-)
- தமிழ்-1, ஆங்கிலம்-1, கணிதம்-2, இயற்பியல்-1, வணிகவியல்-2, உயிரியியல்-1, பொருளியியல்-1, கணினி பயிற்றுநர்-1 – மொத்தம் - 10
- 12 - பட்டதாரி ஆசிரியர் (தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.15,000/-)
- ஆங்கிலம்-3, கணிதம்-2, அறிவியல்-2, சமூகஅறிவியல்-5 – மொத்தம் - 12
- இடைநிலை ஆசிரியர் (தொகுப்பூதியம் மாதத்திற்கு ரூ.12,000/-) 17- பணியிடங்கள்.
பள்ளி வாரியான காலிப்பணியிட விவரங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:
தேதி : 30.06.2025 மாலை 5.45 மணிக்குள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரக வளாகம்,
இரண்டாம் தளம்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்,
காஞ்சிபுரம்.