மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனம் (CPRI - Central Power Research Institute), மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் மின் விநியோக அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் முதன்மை அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (Notification No: CPRI/06/2026) வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியக் தகவல்கள் (At a Glance)
- நிறுவனத்தின் பெயர்: மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனம் (CPRI)
- அறிவிப்பு எண்: CPRI/06/2026
- மொத்த காலியிடங்கள்: 110
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online)
- கடைசி நாள்: 12.10.2026
- அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://cpri.res.in
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்
| பணி விவரம் | காலியிடங்கள் | மாத சம்பளம் (ரூ.) |
| Engineering Officer Gr.1 (Electrical) | 7 | ₹44,900 - ₹1,42,400 |
| Engineering Officer Gr.1 (Civil) | 1 | ₹44,900 - ₹1,42,400 |
| Engineering Assistant (Electrical) | 10 | ₹35,400 - ₹1,12,400 |
| Engineering Assistant (Mechanical) | 10 | ₹35,400 - ₹1,12,400 |
| Scientific Assistant | 2 | ₹35,400 - ₹1,12,400 |
| Technician Gr.1 (Electrical) | 7 | ₹19,900 - ₹63,200 |
| Technician Gr.1 (Mechanical) | 2 | ₹19,900 - ₹63,200 |
| Technical Attendant Gr.1 | 37 | ₹18,000 - ₹56,900 |
| Assistant Gr. II | 29 | ₹25,500 - ₹81,100 |
| MTS Gr.1 (Watch & Ward Duties) | 14 | ₹18,000 - ₹56,900 |
கல்வித் தகுதி
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
- 10-ஆம் வகுப்பு
- ITI (சம்பந்தப்பட்ட பிரிவில்)
- டிப்ளமோ (Diploma)
- B.E / B.Tech (பொறியியல் துறை)
- இளநிலைப் பட்டம் (Degree)
வயது வரம்பு (12.10.2026 தேதியின்படி)
- குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்
(அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).
தேர்வு செய்யப்படும் முறை
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test)
- திறன் தேர்வு (Skill Test / Trade Test - தேவைப்படும் பணியிடங்களுக்கு மட்டும்)
- சான்றிதழ்கள் சரிபார்ப்பு (Document Verification)
விண்ணப்பக் கட்டணம்
- பொது / OBC / EWS பிரிவினர்: ரூ. 1,000/-
- SC / ST பிரிவினர்: கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் CPRI அதிகாரப்பூர்வ இணையதமான
-க்குச் செல்லவும்.https://cpri.res.in - வேலைவாய்ப்பு பிரிவில் (Careers / Recruitment) CPRI/06/2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- தகுதியான பணியைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- இறுதியாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை எதிர்காலத் தேவைக்காகப் பிரதி (Printout) எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதி: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.10.2026. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பியுங்கள்!
மத்திய அரசு வேலையை எதிர்பார்க்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்தத் தகவலை உடனே பகிருங்கள்! 📲📌
👇 கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க:
🌐


