சென்னை | மே 21, 2026
படிப்பின் முக்கிய அம்சங்கள்:
இக்கல்வித் திட்டம், புதிய தொழில் தொடங்கத் திட்டமிடும் நபர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள தங்களது குடும்பத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பும் வாரிசுகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது:
- தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் (Project Report Preparation): வங்கிக் கடன் பெறுவதற்கும், மானியங்களுக்கு விண்ணப்பிப்பதற்கும் தேவையான முறையான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பயிற்சி.
- அரசு மானியங்கள் & திட்டங்கள்: தமிழக அரசின் UYEGP, NEED, PMEGP போன்ற பல்வேறு தொழில் கடன் மானியத் திட்டங்கள் குறித்த முழுமையான வழிகாட்டல்.
- நிர்வாகப் பயிற்சி: சந்தைப்படுத்துதல் (Marketing), நிதி மேலாண்மை (Financial Management), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகச் சட்டங்கள் குறித்த நிபுணர்களின் நேரடி வகுப்புகள்.
சேர்க்கைக்கான தகுதிகள்:
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு (10th Std), பன்னிரண்டாம் வகுப்பு (12th Std), ஐடிஐ, டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.- விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII-TN) அதிகாரப்பூர்வ இணையதளமான படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்காமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் "முதலாளி" ஆக விரும்பும் தமிழக இளைஞர்கள் இந்த அரசுப் பயிற்சியைப் பயன்படுத்திப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
