ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆர்.சி. புத்தகத்தில் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து ஓட்டுநர் உரிமங்களிலும் (Driving Licence) மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களிலும் (Vehicle RC Book) தற்போதைய பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை உடனடியாக புதுப்பிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் சேவைகள் நேரடியாக பொதுமக்களை சென்றடைவது உறுதி செய்யப்படும்.
📱 ஏன் இந்த நடவடிக்கை அவசியம்?
போக்குவரத்து துறையின் பெரும்பாலான சேவைகள் தற்போது பாரிவஹன் இணையதளம் மூலம் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.
அதற்காக OTP அடிப்படையிலான சரிபார்ப்பு அவசியமானதால், பழைய அல்லது தவறான மொபைல் எண்கள் காரணமாக முக்கிய அறிவிப்புகள் பலருக்கு சென்றடையாமல் போகிறது.
இதனால், மின்னணு அபராத சீட்டுகள், காப்பீடு, PUC சான்றிதழ், தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு போன்ற தகவல்கள் வாகன உரிமையாளர்களிடம் சேராமல் அபராதங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
💻 ஆன்லைனில் எளிதாக புதுப்பிப்பது எப்படி?
1. அதிகாரப்பூர்வ இணையதளம்: https://parivahan.gov.in/ செல்லவும்- ஓட்டுநர் உரிமம் → Sarathi Service
- வாகன பதிவு → Vahan Service"
- ஓட்டுநர் உரிமம் எண் / வாகன எண்
- சேசிஸ் எண், எஞ்சின் எண் போன்றவை