இந்தப் பயிற்சி வாய்ப்புகள் விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, திருநெல்வேலி, சென்னை MTC, மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகிய ஏழு மண்டலங்களில் வழங்கப்பட உள்ளன.
மொத்த இடங்கள் விபரம்:
- பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் – 458 இடங்கள்
- டிப்ளமோ முடித்தவர்கள் – 561 இடங்கள்
- கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் – 569 இடங்கள்
கல்வித் தகுதி
பொறியியல் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் Mechanical, Automobile, Civil, Electrical & Electronics, Computer Science, Information Technology ஆகிய துறைகளில் முதல் வகுப்பில் B.E./B.Tech. அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இதர பிரிவுகளுக்கான இடங்களுக்கு B.A., B.Sc., B.Com., BBA, BBM, BCA போன்ற பட்டப்படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 2021, 2022, 2023, 2024 அல்லது 2025 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி வரம்புகள்
ஏற்கெனவே தொழிற்பயிற்சி முடித்தவர்கள் அல்லது 1–2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
பயிற்சி காலம் மற்றும் உதவித்தொகை
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு ஆண்டு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
- பட்டப்படிப்புத் தகுதி – மாதம் ₹9,000
- டிப்ளமோ தகுதி – மாதம் ₹8,000
தேர்வு முறை
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இது திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் விதம்
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் தேசிய தொழிற்பயிற்சி (National Apprenticeship Portal) இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு இணைப்பு