தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மைய அச்சகம், சென்னை மற்றும் அரசு கிளை அச்சகங்கள், வெளியூர் அலகுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர அறிவிக்கை எண்: B2/19303/2025
காலியிடங்கள் மற்றும் தகுதிகள்
1. உதவி ஆப்செட் மிஷின் டெக்னீசியன் (Assistant Offset Machine Technician)
- காலியிடங்கள்: 19
- சம்பளம்: ரூ. 19,500 – 71,900
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி + பிரிண்டிங் டெக்னாலஜி டிப்ளமோ/ஐடிஐ + 3 ஆண்டு பணி அனுபவம்
2. இளநிலை மின்வினைஞர் (Junior Electrician)
- காலியிடங்கள்: 14
- சம்பளம்: ரூ. 19,500 – 71,900
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி + எலக்ட்ரீஷியன் டிரேடில் ஐடிஐ + ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி
3. இளநிலை கம்மியர் (Junior Mechanic)
- காலியிடங்கள்: 22
- சம்பளம்: ரூ. 19,500 – 71,900
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி + மெக்கானிக் பிரிவில் ஐடிஐ + ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி
4. பிளம்பர் கம் எலக்ட்ரீஷியன் (Plumber cum Electrician)
- காலியிடம்: 1
- சம்பளம்: ரூ. 19,500 – 71,900
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி + பிளம்பர் டிரேடில் ஐடிஐ
வயது வரம்பு
- 01.07.2025 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சலுகை:
- எஸ்சி, எஸ்டி: 5 ஆண்டுகள்
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: 2 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை
- விண்ணப்பங்கள் பரிசீலித்து தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில்:
- பத்தாம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு
- தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு, தமிழ்நாடு தொடர்பான பாடங்கள் அடங்கும்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம் 👉 www.stationeryprinting.tn.gov.in
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு, தேவையான சான்றிதழ்களின் சுய சான்று நகல்களுடன் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பக் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
ஆணையர்,எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,110, அண்ணா சாலை, சென்னை – 2
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 19.09.2025
🔗 மேலும் விவரங்களுக்கு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
👉 இது ஒரு நிலையான அரசு வேலைவாய்ப்பு என்பதால், தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பிக்கலாம்.
📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய