சென்னை / கிராமங்கள் :
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற தமிழ்நாடு அரசு புதிய வசதியை அறிவித்துள்ளது. இப்போது, அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக,
- முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம்,
- நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்,
- மத்திய அரசின் PM-AJAY திட்டம் ஆகியவை முக்கியமானவை.
இத்திட்டங்களின் கீழ், விண்ணப்பதாரர்கள் முன்பு இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர்.
இப்போது, பொதுமக்களின் வசதிக்காக CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டங்களில், அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் எளிதில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறை மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதார முன்னேற்றம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!