தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 27 உதவி மருத்துவ அலுவலர் (Assistant Medical Officer – Siddha) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு நிறுவனம் (TN MRB) வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்
- அறிவிப்பு எண்: 14/MRB/2025
- பணி பெயர்: Assistant Medical Officer (Siddha)
- மொத்த காலியிடங்கள்: 27
- சம்பளம்: மாதம் ரூ.56,100 – ரூ.2,05,700
தகுதி
- சித்த மருத்துவத் துறையில் B.S.M.S / B.I.M / H.P.I.M போன்ற ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- 01.07.2025 தேதியின்படி 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பு சலுகை உண்டு (விவரம் இணையதளத்தில்).
விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / SCA / மாற்றுத்திறனாளிகள் – ரூ.500
- மற்றவர்கள் – ரூ.1000(கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம் www.mrb.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
📅 29.09.2025
👉 குறிப்பு: முழுமையான விவரங்கள், வயது சலுகை மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து MRB இணையதளத்தைப் பார்வையிடவும்.