இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்காக மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுத்தூர ஒட்டம் போட்டி 27.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
ஆண்கள் /பெண்கள் இருபாலருக்கும் 2 பிரிவுக்காக கீழ்க்கண்ட விவரப்படி நடத்தப்பட உள்ளது.
போட்டி நடத்தப்படும் தேதி & இடம்
போட்டி நோக்கம்
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை பரவலாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் இந்த போட்டி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
போட்டி பிரிவுகள்
வயது வரம்பு & தூரம்
ஆண்கள்
- 17 – 25 வயது → 8 கி.மீ.
- 25 வயதிற்கு மேல் → 10 கி.மீ.
பெண்கள்
- 17 – 25 வயது → 5 கி.மீ.
- 25 வயதிற்கு மேல் → 5 கி.மீ.
🏆 பரிசுத் தொகை
- முதல் பரிசு – ரூ. 5,000/-
- இரண்டாம் பரிசு – ரூ. 3,000/-
- மூன்றாம் பரிசு – ரூ. 2,000/-
- 4-ம் இடம் முதல் 10-ம் இடம் வரை – தலா ரூ. 1,000/-
போட்டி வழித்தடம்
- பெண்கள் (5 கி.மீ):
- ஆண்கள் (8 கி.மீ, 17–25 வயது):
- ஆண்கள் (10 கி.மீ, 25 வயதிற்கு மேல்):
பதிவு செய்யும் முறை
- போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை போட்டி தொடங்கும் முன் 1 மணி நேரத்திற்கு முன்னர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- மேலதிக விவரங்களுக்கு: