காஞ்சிபுரம், செப்.25:
இந்த போட்டிகள், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்துடன், உடற்தகுதியை பேணுவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஊக்குவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தூரங்கள்:
- தொடக்கம்: வையாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி – 1.25 கிமீ
- மோட்டுர் பெட்ரோல் பங்க் – 1.25 கிமீ
- ஒழுவூர் பேருந்து நிறுத்தம் – 5 கிமீ
- முடிவு: S.B Nagar கருவூர் – 6 கிமீ
நிகழ்ச்சி நேரம்: காலை 7:00 மணிக்கு பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும்.
பங்கேற்பாளர் பிரிவுகள்:
ஆண்கள் / பெண்கள் இருபாலருக்கும் 3 பிரிவுக்காக கீழ்க்கண்ட விவரப்படி நடத்தப்பட உள்ளது.
வ.எண். | வயது வரம்பு | மாணவர்கள் | மாணவியர்கள் |
1 | 13 வயதிற்குட்பட்டவர்கள் | 15. கி.மீ. | 10. கி.மீ. |
2 | 15 வயதிற்குட்பட்டவர்கள் | 20. கி.மீ. | 15. கி.மீ. |
3 | 17 வயதிற்குட்பட்டவர்கள் | 20. கி.மீ. | 15. கி.மீ. |
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள்:
- முதல் பரிசு – ரூ.5,000
- இரண்டாம் பரிசு – ரூ.3,000
- மூன்றாம் பரிசு – ரூ.2,000
- 4-ஆம் முதல் 10-ஆம் இடம் – தலா ரூ.250
பதிவு விவரங்கள்:
- போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர்களை 26.09.2025 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- ஆவணங்கள்: வயதுச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகல்கள்
- சாதாரண இந்தியாவில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
தொடர்பு:
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம்
தொலைபேசி: 7401703481