இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது 2023-2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2025-2026 ஆம் ஆண்டிற்கும் இத்திட்டம் தொடர்கிறது. இதில் மூன்று சிறந்த உயிர்ம உழவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்
- குறைந்தபட்சம் 1 ஏக்கரில் உயிர்ம வேளாண்மை செய்ய வேண்டும்.
- முழுநேர உயிர்ம உழவராக இருக்க வேண்டும்.
- குறைந்தது 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
- உயிர்ம வேளாண்மைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதிவு செய்யும் முறை
- விருது பெற விரும்பும் உழவர்கள் அக்ரிஸ்நெட் (AGRISNET) வலைதளம் மூலம் 2025 செப்டம்பர் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- பதிவுக்கட்டணம் ரூ.100/-
வெற்றியாளரை தேர்வு செய்யும் அளவுகோல்கள்
- உயிர்ம வேளாண்மையில் தொடர்ச்சியான பணி.
- மண்ணில் உயிர்ம கரிமச்சத்து 1.5% மேல் இருக்க வேண்டும்.
- செலவு–ஆதாய விகிதம் குறைந்தது 1.2 ஆக இருக்க வேண்டும்.
- 1 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
- வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை உயிர்ம முறையில் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
- ஒருங்கிணைந்த பண்ணை முறையை பின்பற்ற வேண்டும்.
- விதை, உரம், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தியில் தற்சார்பு நிலை.
- உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை இடுபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்திருக்க வேண்டும்.
- பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- மற்ற உழவர்களை உயிர்ம வேளாண்மைக்கு ஊக்குவித்த பணி செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
For English Version
Nammazhvar Award for Best Organic Farmers Announced
For the year 2025–2026, three farmers will be honored with a cash prize of ₹2 lakhs each, along with a certificate of appreciation. This initiative was officially announced by District Collector Mrs. Kalaichelvi Mohan, I.A.S.
Eligibility Criteria:
- Minimum 1 acre of organic farming.
- Must be a full-time organic farmer.
- At least 3 years of experience in organic farming.
- Possession of valid organic farming certification.
Application Process:
- Farmers wishing to apply for the Nammazhvar Award must register on the Agrinet website before 15th September 2025.
- Registration fee: ₹100.
Evaluation Criteria:
- Continuous engagement in organic farming.
- Soil organic matter content above 1.5%.
- Cost-benefit ratio of at least 1.2.
- Cultivation of more than 1 acre under organic methods.
- Adoption of organic practices in both agricultural and horticultural crops.
- Implementation of integrated farming systems.
- Self-sufficiency in seed, organic manure, and natural input production.
- Value addition and profitable marketing of organic products.
- Usage of traditional seeds.
- Contribution to motivating and inspiring other farmers towards organic farming.
This scheme aims to strengthen sustainable agriculture practices and honor progressive farmers who inspire others.