மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது:
காலியாக உள்ள பணியிடங்கள்
- ஆரம்ப கால தலையீடு மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் – 01 (District Early Intervention Centre - DEIC)
- ஒலிப்பதிவாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் – 01 (Audiologist & Speech Therapist)
- ஆடியோமெட்ரிஷியன் – 01 (Audiometrician)
- நடத்தை சிகிச்சை சிறப்பு கல்வியாளர் – 01 (Special Educator of Behaviour Therapy – DEIC One Stop Centre under TN Right Project)
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்களை https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து 10.10.2025 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.
முக்கிய குறிப்பு
- குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
📢 வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.