வேலூர்:
இதன் இரண்டாம் கட்டமாக, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவ–மாணவியர்கள் பங்கேற்கும் வகையில், சிறப்பு கல்விக்கடன் வழங்கும் மேளா வரும் செவ்வாய்க்கிழமை (16.09.2025) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, காட்பாடி வட்டத்தில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இ-சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், கல்விக்கடன் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் ஒரே இடத்தில் பெறப்படும்.
மாணவர்கள் முகாமிற்கு வரும்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
- மதிப்பெண் பட்டியல்
- PAN Card
- Aadhaar Card
- சமூகச் சான்று (Community Certificate)
- வருவாய் சான்று (Income Certificate)
- முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate)
- கல்லூரி Bonafide Certificate
- கல்விக்கடன் தேவை விவரம்
மேலுள்ள ஆவணங்களுடன் மாணவர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.