காஞ்சிபுரம், ஆகஸ்ட் 1:
இதற்காக நெகிழி பயன்படுத்தாமல், மறும் பொருட்கள் மறுசுழற்சி செய்யும் உணவகங்கள், மற்றும் தெருவோர சிறிய வணிகர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருதுக்கான விவரங்கள்:
-
மிகச் சிறந்த உணவகங்கள் (வருடாந்திர வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மேல்):🏆 ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் விருது
-
சிறிய உணவகங்கள் மற்றும் தெருவோர வணிகர்கள்:🏆 ரூ.50,000 பரிசுத் தொகையுடன் விருது
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
2025 ஆகஸ்ட் மாத இறுதி
தகுதி விவரங்கள்:
-
உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
-
விண்ணப்பதாரர் உணவுப் பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
-
உணவக ஊழியர்களுக்கு 12 மாதங்களுக்கான தொற்றுநோய் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
-
FSSAI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதார தணிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
-
உணவு பாதுகாப்புத்துறையின் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
-
ஆபத்துள்ள உணவுப் பொருட்கள் தொடர்பான மதிப்பீட்டில் 90% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
-
சுய அறிவிப்பு பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் – சுகாதார நடைமுறை, கழிவு மேலாண்மை ஆகியவை பின்பற்றப்படுகிறதா என்பதைக் குறிக்க.
விண்ணப்ப மற்றும் தொடர்பு விவரங்கள்:
விருப்பமுள்ளவர்கள் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சார் ஆட்சியர் கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை அல்லது உதவியாளர் வி. முத்துகுமரனை (மொபைல்: 88257 39050) நேரில் தொடர்புகொள்ளலாம்.
Tamil Nadu Government Food Vendor Awards – Kanchipuram 2025