இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளதாவது,
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழிரியர்கள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுகளும், மண்டல அளவில் 7 விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
இது குறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இப்போட்டிகளில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.2000/-மும். மூன்றாம் பரிசாக தலா ரூ.1000/- வழங்கப்படும்.
மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 .00 இலட்சமும, இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழிரியர்களுக்கும் மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 26.08.2025 முதல் 11.09.2025 வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளுக்கான விபரம் (போட்டிகள் நடைபெறும் இடம், நாள்) கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.