இதில் குறிப்பாக, ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு (PEACE) திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் ஆற்றல் சேமிப்பு குறித்தான தணிக்கை மேற்கொள்ளும் கட்டணத்தில் 75% அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரை மானியமாக பெறலாம். தோல் பதனிடும் தொழிற்சாலைகள், வார்ப்பு தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள், பிளாஸ்டிக் உற்பத்தி, இயந்திர தளவாடங்கள் உற்பத்தி போன்ற தொழில் நிறுவனங்கள் பயன் பெறலாம்.
மேலும் ஆற்றல் தணிக்கையில் பரிந்துரைக்கபடும் இயந்திர தளவாடங்கள் நிறுவும் கட்டணத்தில் 50% அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை மானியமாக பெறலாம். வேலூர் மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரங்களான அணைக்கட்டு, கீ.வ.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களில் குறு, மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க நிலம் வாங்கும்பட்சத்தில் முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் 50% மானியமாக பெறலாம்.
மேலும் அறிவுசார் சொத்து உரிமை (PATENT) பதிவு செய்த தொழில் நிறுவனங்களுக்கு பதிவு சான்றிதழ் பெற செலவு செய்த ஆவணங்கள் ஏதுமில்லாமல் பதிவு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்து 50% ரூ.1.00 இலட்சம் வரை மானியமாக பெறலாம். மேலும் ஆவணங்களுடன் 75% அதிகபட்சமாக ரூ.3.00 இலட்சம் வரை மானியமாக பெறலாம்.
வாணிப குறியீடு (TRADE MARK) பெறும் தொழில் நிறுவனங்களுக்கு 50% அதிகபட்சமாக ரூ.25,000/- வரை மானியமும், மற்றும் புவிசார் குறியீடு (GI) பதிவு செய்த சான்றிதழ் சமர்ப்பித்து 50% அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரை மானியமாக பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூர் சாலை, காட்பாடி, வேலூர்-06 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்கள் 89255 34029, 89255 34030 மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த அறிய வாய்ப்பினை வேலூர் மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.இரா.சுப்புலெட்சுமி.,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.