காஞ்சிபுரம், ஜூலை 21:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வழிகாட்டுதலின் கீழ், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மகளிர் திட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26, 2025 (சனிக்கிழமை) அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 26.07.2025 சனிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 26.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Labels / Keywords: Kanchipuram Job Fair / Private Sector Recruitment / Tamil Nadu Employment Exchange/ Skill Training Jobs / Women Empowerment Schemes / Pachaippa’s College Job Fair / Job Mela Tamil Nadu / Kanchipuram Employment News / Unemployed Youth Jobs / ITI Diploma Degree Jobs / Direct Interview Opportunity / Kancheepuram District Collector /