காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
வ.எண்
| கல்லூரியின் பெயர்
| மொத்த இடங்கள்
|
1. | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பெரும்புதூர், சென்னை-69 | 240 |
2. | புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , உத்திரமேரூர் - 603406 | 760 |
-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது.
-
‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டங்கள் மூலம் மாணவ/மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
-
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சிகள் மற்றும் பணியிட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
-
இலவசப் பேருந்து பயணம், கல்வி உதவித்தொகை, திறமைமிக்க ஆசிரியர்கள், சிறந்த கட்டமைப்பு வசதிகள் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க:
2025-26 கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தாமாக இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகிலுள்ள அரசு கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களை (AFC) தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.