தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.நாகராஜன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிககளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள்
படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன கூடிய 23 விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன.

இதில் மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், என்.எல்.சி. பள்ளி நெய்வேலி, அரசு மேல்நிலைப் பள்ளி புதூர் சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
மாணவிகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்னை, பாரதி வித்யாபவன் திண்டல் ஈரோடு, செல்வம் மேல்நிலைப்பள்ளி நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டு விடுதிகளில் மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னனாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, துப்பாக்கி சுடுதல், மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், கடற்கரை கையுந்துபந்து மற்றும் வில்வித்தை போட்டிகள் நடக்கின்றன. மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, துப்பாக்கி சுடுதல், மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், கடற்கரை கையுந்துபந்து மற்றும் வில்வித்தை போட்டிகள் நடைபெற உள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். படிவங்கள் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இத்தகவலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலர்/உறுப்பினர் செயலர் பிரதீப்யாதவ் தெரிவித்துள்ளார் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் நாகராஜனை 0416-2221721, 7401703483 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் முழுவிவரங்களுக்கு http://www.sdat.tn.gov.in/index.php/component/content/article?layout=edit&id=527 அல்லது www.kalasakkaram.com விண்ணப்பம் தறவிறக்கம் செய்யலாம்
Click Below Link
Sports Development Authority of Tamil Nadu
Instruction
Application