காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்சி.வி.எம்.பி. எழிலரசன்ஏற்பாட்டில்,
மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்!!
********
இதுகுறித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தெரிவித்துள்ளதாவது,
செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநருமான சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில், நாளை (23.08.2025) காஞ்சிபுரம், எஸ்.எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமானது காலை 09.00 மணிக்கு தொடங்கி மாலை 04.00 மணி வரையில் நடைபெறும். வேலைவாய்ப்பு முகாமினை, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள்தொடங்கி வைக்க உள்ளார்.
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், கழக செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், பகுதிக் கழக செயலாளர்கள் கே. திலகர், எஸ். சந்துரு, அ.தசரதன், சு.வெங்கடேசன், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.பாபு,
பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி. சீனிவாசன், எஸ்.சிகாமணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அ.யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி மலர்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், மாவட்ட ஊராட்சிகுழு துணைத் தலைவர் திருமதி நித்யா சுகுமார்,உள்ளிட்ட மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, வட்டக் நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாமில் 75 நிறுவனங்கள் பங்கேற்று, 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ., டிப்பளமோ, Nursing, B.E.,/B.Tech., M.B.A., M.C.A.,B.A., B.Sc., B.Com., B.B.A., Any Degree (UG/PG) படித்தவர்கள் - (Pass/Arrears) உள்ளிட்ட அனைத்து வகையான பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்களும், வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் கூட இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக் கொள்ள வருபவர்கள்,எத்தனை நிறுவனங்களில் பங்கேற்க விரும்புவதற்கு ஏற்ப சுயவிவரப்படிவம்,படிப்பு சான்றிதழ் நகல்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். அனைத்து பாலினத்தவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க தனி கவனம் செலுத்தப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யத் தவறியவர்கள் முகாம் நடைபெறும் சமயம் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்பவர்கள் முன்னதாகவே விளம்பரத்தில் உள்ள QR Code மூலம் ஸ்கேன் செய்து முன்பதிவு செய்திருந்தாலும், முகாம் நடைபெறும் வளாகத்தின் முகப்பில் உள்ள QR Code மூலம் ஸ்கேன் செய்து தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். வருகையை பதிவு செய்பவர்களுக்கு இந்த முகாமிற்கான தனி அடையாள எண் (Unique ID No.) வழங்கப்படுகிறது. செல்போன் கொண்டு வராதவர்கள் அருகிலுள்ள உதவி மையத்தை அணுகி தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும்.
நேர்காணல் வருபவர்கள், தங்களது செல்போனை பயன்படுத்தி செயலி (App) மூலமாக அவரவர் கல்வி தகுதிக்கேற்ப தாங்கள் விரும்பும் நிறுவனங்களை தேர்வு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் அறை எண் விவரம் பேனராக வைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாமிற்குவருகை தருபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும், உதவி செய்யவும்ஏதுவாக தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி தகவல் தொழில்நுட்ப அணி சார்ந்தவர்களும், Young India அமைப்பின் சார்பாக இளைஞர்களும், பச்சையப்பன் ஆடவர்/மகளிர் கல்லூரி, ஸ்ரீ சங்கரா கல்லூரி, எஸ்.எஸ்.கே.பி. மகளிர் கல்லூரி, காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, திருமலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் பங்கேற்க வரும் ஒரு நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணலில் பங்கேற்க வழிகாட்டுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேர்காணலில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர், தேநீர், ஸ்நாக்ஸ், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மதிய உணவு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ., ஏற்பாடு செய்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம் சிறப்புடன் நடைபெற Skilled Jobs நிறுவனர் ராகவன் ராமு அவர்களும்,செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் சி.வி.எம்.பி.பார்வேந்தன், முனைவர் க. செல்வம், எ.க. ஆதித்தியன், எ.க.அகத்தியன், எஸ்.எழில்குமார்உள்ளிட்டோர் அமைப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எல்.ஏ., அவர்கள் தெரிவித்துள்ளார்.