இயல் ஒன்று1 . அன்னை மொழியே
அன்னை மொழியே !  அழகார்ந்த  செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த    நறுங்கனியே !
கன்னிக் குமரிக்  கடல்கொண்ட    நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப்  பேரரசே!
தென்னன் மகளே ! திருக்குறளின்  மாண்புகழே !
இன்னறும் பாப்பத்தே !எண்தொகையே!  நற்கணக்கே1
மன்னுஞ் சிலம்பே ! மணிமே  கலைவடிவே !
முன்னும் நினைவால்   முடிதாழ    வாழ்த்துவமே !
           ✍ - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
✷✷✷✷✷
இயல் இரண்டு2. முல்லைப்பாட்டு
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், " கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர் , தாயர் " என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் .
       ✍ - நப்பூதனார்
✷✷✷✷✷
இயல் மூன்று3. காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே .
✍ - அதிவீரராம பாண்டியன்
✷✷✷✷✷
இயல் மூன்று4. திருக்குறள்
1.  எப்பொருள்  எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்பது அறிவு .
2. பல்லார் பகைகொளலின்  பத்தடுத்த  தீமைத்தே
   நல்லார் தொடர்கை விடல் .
3. பண்என்னாம் பாடற்  கியைபின்றேல் கண்என்னாம்
    கண்ணோட்டம் இல்லாத கண் .
4. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
   பெருமை முயற்சி தரும் .
5.  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும் .
✍ -  திருவள்ளுவர் 
✷✷✷✷✷
இயல் - 4பெருமாள் திருமொழி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்  பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ
ஆளா  உனதருளே  பார்ப்பன் அடியேனே.
 ✍ -   குலசேகராழ்வார்
.png)





